Adiraipirai.in
posts

கணினி

Managed Services

கணினி

                                               உபயோகித்தலில்

                                                                 முதுகுவலி-தீர்வு

சமீப காலமாக கணினி பயன்படுத்துபவர்கள் முதுகுப் பாதிபிற்கு அதிகம் உட்படுகின்றனர்.இதற்கு காரணம் தொடர்சியாக அதிக நேரம் அமர்ந்தநிலையில் பணிபுரிதல்,சரியான தோற்றநிலையில் இல்லாமல் இருத்தல்,வேளை பளூ காரணமாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்தாமல் இருத்தல் போன்றவையே ஆகும்.தோற்றநிலை மற்றும் உடற்பயிர்சியில் கவனம் செலுத்தாததால் இளம் வயதிலேயே முதுகு அதிக பாதிப்பிற்கு உட்பட்டு பின் அவ்வேலையை விடவேண்டிய கட்டாயத்திற்குச் சிலர் தள்ளப்படுகின்றனர்.கணினி உபயோகிப்பாளர்கள் முதுகுப் பாதிப்படையாமல் இருக்கக் கடைபிடிக்க வேன்டிய சில உத்திகளையும் பின் வருவனவற்றிலிருந்து தெரிந்து கொள்ளாலாம்….

                                 கணினி மேசை (Computer Table)

கணினி வைக்கப்பட்டிருக்கும் மேசையின் உயரத்தை உபயோகிப்பாலரின் உயரத்திற்குத் தகுந்தாற்போல் அமைக்கவேண்டும்.கணினி உபயோகிப்பாளர்கள் தாங்கள் உபயோகப்படுத்தப்போகும் நாற்கலியில அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் நாற்காலியின் பக்கவாட்டில் தொங்கவிட வேண்டும்.உபயோகிப்பாளரின் முழங்கை மூட்டு உள்ள உயரமே மேசை இருக்கவேண்டிய சரியான உயரமாகும்.

                           கீ-°போர்டு மற்றும் மெளஸ்( Key Board & Mouse)

1))கீ-போர்டு மற்றும் மெளஸ் பயன்படுத்தும் போது மணிக்கட்டு நேராகவும்,முழங்கை 90 °(டிகிரி)கோணத்திற்கு மடங்கி உள்ளவாறும் பார்துக் கொள்ள வேண்டும்.
2)எளிதில் இயக்கும் இடத்திலும்,எளிதில் எட்டும் இடத்திலும் கீ-போர்டு மற்றும் மெளஸ் இருக்க வேண்டும்.
3)கீ-போர்டை அடுத்த மெளஸை அருகிலேயே ஒரே உயரத்தில் வைத்திருக்கவேண்டும்.
4)கீ-போர்டைச் சற்று சறிந்த நிலையில் வைத்திருத்தல் நலம்.சரிவு நிலை 5°டிகிரி முதல் 15°டிகிரி வரை இருக்கலாம்.
5)கீ-போர்டை இரண்டு கைகளாலும் உபயோகிப்பவர்களாக இருந்தால் அவர்களின் உடலுக்கு நேரே,முன்னே வைத்திறுக்க வேண்டும்.
6)கீ-போர்டை ஒரு கை கொண்டு இயக்குபவராக இருந்தால்,இயக்கும் கைக்கு நேரே வைத்திறுக்கவேண்டும்.
7)தற்போது சந்தையில் கிடைக்கும் மணிக்கட்டிற்குத் தீங்கு தராத புதுமாதிரியான ஸ்பிளிட் கீ-போர்டை (spilit key board) பயன்படுத்தலாம்.
8)மெளஸ் உபயோகிக்கும் போது மணிக்கட்டு வைக்கும் பேடைப் (mouse pad)) பயன் படுத்தலாம்.
9)மெளஸ் உபயோகிப்பதைக் குரைத்துக்கொண்டு கீ-போர்டைக் கொண்டு கணினியை இயகுதல் நலம்.
10)மெளஸை இருகப்பிடித்துக் கொண்டிருக்காமல் தளர்வாகப் பிடிதுப் பயன்படுத்தவேண்டும்.
11)பணிபுரியும் போது மணிக்கட்டு நேராகவே இருத்தல் வேண்டும் பணிக்கு நடுவே பயிற்சி செய்யும் பொருட்டு பெருவிரலையும்,சுண்டுவிரலையும் தனியே நீட்டுதல்(Extension of the finger)கூடாது

12)மெளஸை இயக்கவேண்டிய மணிக்கட்டை மட்டும் சுழற்றாமல் மொத்த கையையும் சுழற்றுவது நலம்.

                                       கணினித் திரை(Computer Monitor)

1)பணியாற்றுபவர்களின் நேரே திரை இருக்க வேண்டும்.அதேபோல் டைப் செய்யும் டாக்குமென்ட்டும் முன்னேயே இருக்கவேண்டும்.
2)திரையானது பயன்படுத்துபவரின் கண்கள் உள்ள உயரத்திர்கோ அல்லது அதற்குக் கீழேயோ இருத்தல் வேண்டும்.
3)திரையானது பயன்படுத்துபவரின் கண்ணிலிருந்து 18 இன்ச் முதல் 30 இன்ச் தூர இடைவெளி இருத்தல் நலம்.

                                                 கால் தாங்கி (Foot Rest)

கணினி முன் அமர்ந்த பணி செய்யும் போது பாதங்கள் தரையில் படவில்லையெனில் தோற்றநிலை பாதிக்கப்பட்டு,பின் முதுகுப் பாதிப்பிற்கு உள்ளாவதற்கு வாய்ப்பாகும்.எனவே கால் தாங்கி பயன்படுத்தும் போது முழங்கால் மூட்டு இடுப்பு அளவைவிட மேலே செல்லாமல் பார்த்துக்கொள்ளுதல் நலம்.
               கால்தாங்கியின் நீள,அகலம் முறயே 12x16 இன்ச்சாக இருக்கலாம்கால்தங்கி பொதுவாக சரிவாக இருத்தல் நன்று.சரிவு நிலை 25°முதல் 30°ஆக இருக்கலாம்.கால் தாங்கியின் தளம் வழுக்காதவாறு உள்ள மேள்விரிப்பைக் கொண்டு செய்யப்பட்டிருக்கு வேண்டும்.