இஸ்லாம் எங்கள் வழி! தமிழ் எங்கள் மொழி! (நெகிழ்ச்சியூட்டும் படங்கள்)

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தம் பாரம்பர்ய உரிமையை மீட்டெடுக்க சென்னை மெரினா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள், மெரினா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல லட்ச இளைஞர்கள், பொதுமக்கள் மேற்கொண்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்கு மிக அத்தியாவசியம் உணவு, தண்ணீர் மட்டுமே. இத்தனை லட்ச மக்களுக்கு எப்படிச் சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்த அனைவருக்கும், “உங்களுக்கான தேவைகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். துணிந்து போராடுங்கள்” என்று ஏராளமான இஸ்லாமியர்கள் கூறிவருகின்றனர். வேன் மற்றும் லாரிகளின் மூலம் மெரினாவில் கூடி இருக்கும் அத்தனை மக்களுக்கும் உணவு, தண்ணீர், பழங்கள் போன்றவை கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரிடமும் அருகே சென்று, ‘‘நீங்கள் சாப்பிட்டீங்களா… போராடிக்கொண்டே சாப்பிடுங்கள். பழங்கள் சாப்பிடுங்கள்’’ என்று ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மெரினாவுக்கு அருகில் குடி இருக்கும் பல இளைஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். யாருக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை அறிந்துகொண்டு, அதை வாங்கிக் கொண்டுவந்து கொடுக்கின்றனர். உண்மையிலேயே இந்த மாபெரும் போராட்டத்தில் தன்னார்வலர்களின் பங்கு அளப்பரியது.மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்

Close