Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டம்!

தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டா ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட 250க்கு மேற்பட்டோரை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கு ஆதரவு தெரிவித்து புதுவை மாநிலத்திலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.
அந்தவகையில்  அதிரை அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டம்,  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy