அதிரையில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் வழங்கி உதவிய சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் (படங்கள் இணைப்பு)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தம் பாரம்பர்ய உரிமையை மீட்டெடுக்க சென்னை மெரினா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள், மெரினா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக அதிரை பேருந்து நிலையத்தில் அதிரையர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு தாகம் தணிப்பதற்காக அதிரை சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை விநியோகம் செய்தனர்.

திரை

Close