அதிரை ECR சாலையோரம் திடீர் பள்ளங்கள், எச்சரிக்கை! விபத்துக்கள் ஏற்படும் அபாயம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் ஈ.சி.ஆர் சாலை காதிர் முகைதீன் கல்லூரிக்கு அருகாமையில் கூட்டுகுடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டி அதனை மூடி விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிரையில் பெய்த மழையின் காரணமாக இந்த பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் மண்சரிவு ஏற்படுகிறது. சாலையை விட்டு சில செண்டி மீட்டர்கள் மணலில் கால்வைத்தாலே பள்ளம் ஏற்படுகிறது.

அரசு பணியாளர்கள் இந்த பள்ளத்தை மூடும் போது அதில் சரிவு ஏற்படாத வகையில் மூடிச்செல்லாததன் விளைவாகவே இது போன்ற சூழல் நிலவுகிறது. கல்லூரி முடிந்து திரளாக செல்லும் மாணவ மாணவிகள் சாலையோரம் தெரியாமல் கால்வைத்தால் அருகில் உள்ள கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. அதுபோன்று இருசக்கர் வாகனங்களோ, கனரக வாகனங்களோ சாலையை விட்டு ஒரு அடி விலகினால் கூட கால்வாய்க்குள் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வருமுன் காப்பதே சிறந்தது என்ற வகையில் விபத்துக்கள் ஏற்படும் முன்பாகவே இந்த மணல் சரிவு ஏற்படாத வகையில் திடமாக அமைக்கப்பட வேண்டும்.

Close