அதிரை காட்டுகுளம் தூர்வாரும் பணி தீவிரம்! (படங்கள் இணைப்பு)

அதிரை சி.எம்.பி லேன் பகுதியில் இருந்து நடுவிக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது காட்டுக்குளம். இந்த குளத்தில் இருந்து பம்பிங் மூலமாக எடுக்கப்படும் நீர் சி.எம்.பி லேன், கள்ளுக்கொள்ளை, புதுமனைத்தெரு உள்ளிட்ட பல தெருக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மழையில்லாத காரணத்தால் ஒராண்டாக நீரின்றி குளம் வறண்டு காணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக தூர்வாரப்படாது காணப்பட்ட இந்த குளத்தின் தூர்வாரும் பணி இன்று துவங்கியுள்ளது.

Close