அதிரை கிரிக்கெட் வீரர்களின் கடல்கடந்த சாதனை!

அதிரையில் கோடைகாலம் என்றாலே கல்யாணம் ஒரு பக்கம் மற்றொன்று விளையாட்டு, ஆம் மூளை முடுக்கெல்லாம் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. சென்ற வாரம் முழுதும். கும்பகோனம் வரை சென்று மாநில அளவிலான பலப்போட்டிகளில் பங்குபெற்று தொடர்ந்து வெற்றிகளை குவித்து நேற்று நடந்த போட்டியில் அரையிறுதி வாய்ப்பினை நழுவ விட்டது தலை சிறந்த AFCC அணி என்று ரசிகர்கள் மத்தியில் கவலையுடனிருக்கும் வேலையில் இன்று காலை ஆமிரகம் துபாயில் நமதூர் ABCC dxb (Adirai Boys Cricket Club – dubai) அணி அரையுறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னெறியது அல்ஹம்துலில்லாஹ் இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை நாடுகளை சேர்ந்த வீரர்கள், நமதூரினை சுற்றியுள்ள முத்துப்பேட்டை, மதுக்கூர், காயல்பட்டினம், கடையநல்லூர் மற்றும் சென்னை போன்ற பலமிகுந்த 18 அணிகள் பங்குபெற்று அதில் இரு குழுமமாக தலா 9 அணிகள் இடம் பெற்று இரண்டு மாதங்களாக விளையாடி வந்தனர். இன்று காலை நடைபெற்ற Semi Final ஆட்டத்தில் கடையநல்லூர் அணியை எதிர்கொண்டது, இதில் முதலில் பேட் செய்த நமதூர் ABCC dxb அணி 168 all out அடுத்து களமிறங்கிய கடையநல்லூர் அணி வெறும் 88ரன்கள் எடுத்து all out ஆகி, 60ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து எளிதாக இறுதி போட்டிக்கு முன்னெறியது, வரும் வெள்ளியன்று காலை இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த AUTO TRADERS XI அணியை எதிர்கொள்கிறது, எதிர் அணியில் நமதூரை சேர்ந்த இரு வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: அகமது முஹைதீன், இர்பான் அதிரை தென்றல்  (AFCC)
Close