மக்களை தூங்க விடாமல் தொடர் தூக்கத்தில் அதிரை பேரூராட்சி! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில மாதங்களாகவே சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்த நிலை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதிரை 19-வது வார்டு செக்கடி குளத்திற்கு பின்புறமாக உஸ்வத்துர்ரசூல் பெண்கள் மதர்ஸா அருகாமையில் கடந்த 10 நாட்களாக பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பையை அகற்றாமல் உள்ளதால் மலை போல் குவிந்து கிடப்பதால், துற்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லைகள் இருந்து வருகின்றன. இதனால் மதர்ஸா மாணவிகள் மற்றும் அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் வசித்துவரும் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பல முறை இன்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று ஒரு பகுதியில் உள்ள குப்பைகளின் நிலை குறித்து நமது தளத்தில் பார்த்தோம். இதே போன்று மேலத்தெரு, வாய்க்கால் தெரு, சுரைக்காய் கொள்ளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இது பேரூராட்சி செயல் அலுவலரின் அலட்சியபோக்கையே காட்டுகிறது…!

Close