பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடிய இந்திய வீரர்கள்!

குடியரசு தினத்தையொட்டி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

நாடு முழுவதும் 68ஆவது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி எல்லைப் பகுதிகளில் உள்ள அண்டை நாடுகளுடன் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அடாரி-வாகா எல்லை பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வங்கதேசம் நாட்டின் எல்லைப் பகுதியான புல்பாரியில் அந்நாட்டு வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கினர்.

Close