ஷார்ஜா பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த அதிரை சிறுவன் (படங்கள் இணைப்பு)

அதிரையை சேர்ந்தவர் முஹம்மது ரஃபி. இவர் ஷார்ஜாவில் பணி நிமித்தமாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் முஹம்மது ஷாரிக் அங்குள்ள இந்தியன் இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்றைய குடியரசு தினத்தை முன்னிட்டு அந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், இந்திய கொடி போன்று பெட்டிகளை சேர்த்து ஓடும் ஓட்டப்போட்டியில் அதிரை சிறுவன் முஹம்மது ஷாரிக் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவருக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close