இளைஞர்களின் எழுச்சியால் பின்னுக்கு தள்ளப்படும் Pepsi & Coca Cola !

தமிழ்நாடு வணிகர் சங்கம் கோகோ கோலா மற்றும் பெப்ஸி குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1-ம் தேதி முதல் விற்பதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இரண்டுக்கும் 1,400 கோடி ரூபாய் வரை இழப்பு நேரிட வாய்ப்புள்ளது.

மேலும் இந்த நிறுவனங்கள் எப்படி எல்லாம் தங்களது வருமானத்தில் இழப்பைச் சந்திக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

நொறுக்குத் தீனிகள்

 • வணிகர்கள் பெப்ஸி மற்றும் கோகோ கோலா நிறுவனங்களின் நொறுக்குத் தீனிகள், ஓட்ஸ் போன்றவற்றை விற்பதையும் தடை செய்தால் பெறும் அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

  • தமிழக வணிகர் சங்கங்கள்

   தமிழ் நாட்டில் மிகப்பெரிய வணிகர் சங்கமான இதில் 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் 6000 சிறு சங்கங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து வணிகர் சங்கங்களும் விற்பனையை நிறுத்தும் போது பெப்ஸி, கோகோ கோலா நிறுவனங்கள் பெரிதளவில் பாதிக்கப்படும்.

   • உள்ளூர் குளிர்பானங்கள்

    உள்ளூர் குளிர்பானங்கள் நிறுவனங்களுக்கு வணிகர் சங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளதால் தமிழக நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

   • காரணம் பீட்டா, கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்களால் தான் விவசாயிகள் பெரிதளவில் பயப்படுகின்றார்கள் என்றும், ஜல்லிக்கட்டுத் தடை செய்யப்பட்டது என்றும் அவற்றுக்கு எதிராகவே மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டுக் குளிர்பானங்கள் விற்கப்போவதில்லை என்று வணிகர் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன. அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டுக் குளிர்பானங்கள் நிறுவனங்கள் இரட்டை விலை முறையில் தங்களுக்குப் பொருட்கள் அளிப்பதாகவும், அதாவது பெரிய கடைகளுக்குக் குறைந்த விலையிலும், சிறு கடைகளுக்குக் அதிக விலையிலும் பொருட்களை அளிப்பதாகவும் கூறுகின்றனர்.

Close