அதிரையில் தீ வைப்புத் துறை!

அதிரையில் கடந்த சில மாதங்களாகவே சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்த நிலை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கீழே உள்ள படங்களை காணலாம். அதிரை புது ஆலடித்தெருவில் கடந்த பல நாட்களாக பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பையை அகற்றாமல் உள்ளதால் மலை போல் குவிந்து கிடப்பதால், துற்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லைகள் நிலவி வருகின்றன. மேலும் சில சமயங்களில் குப்பைகளை அள்ளிச்செல்லாமல் ஊழியர்கள் குப்பைகளை தீவைத்து கொளுத்தி விடுவதாகவும் இதனால் காற்று மாசடைந்து நோய்கள் பரவும் சூழலும் உள்ளது.

Close