உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதத்திற்கு பிறகே நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக கடந்த டிசம்பர் 30ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கான சட்ட முன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிமுகம் செய்தார். இந்த சட்ட முன்வடிவில், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு இறுதி தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த காலகட்டத்தில் , வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதுடன், பள்ளிக் கட்டிடங்கள் வாக்குச்சாவடியாக பயன்படுத்த முடியாது என்பதாலும், ஏப்ரலுக்கு பின்னரே தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனிஅதிகாரிகளின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close