அதிரை வீரர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு..!

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். ஃப்ரான்சில் வசித்து வருகின்றார். இவரது மகன் மஹாதீர் முஹம்மது. ப்ரான்ஸில் ஒரு பள்ளியில் படித்து வருகின்றார். இவரது தாய் அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஃப்ரான்சில் உள்ள ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பாக ஆடி பல பரிசுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபேறது. இதில், கலந்துகொண்டு தனது சிறப்பான திறமையை வெளிபடுத்திய மகாதீர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

இவர் மேன்மேலும் பல்வேறு வெற்றிகளைக் குவித்து உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close