Adirai pirai
இந்தியா

மீண்டும் ‘மீண்டு’ வருகிறது NOKIA!

உலகம் முழுக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்ட பிறகு நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் மீதான ஆர்வம் பூதாகரமாய் கிளம்பியுள்ளது என்றே கூறலாம். வாடிக்கையாளர்களின் பரவலான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நிறுவனம் பணியாற்றி கொண்டிருப்பது போல தெரிகிறது.

அதாவது அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற உள்ள எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் மொபைல் போன் முன்னோடியான நோக்கியா அதன் ஸ்மார்ட்போன்கள் ஒரு பரவலான முறையில் வெவ்வேறு வகைகளில் தொடங்கவுள்ளதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. எனினும், மறுபக்கம் நோக்கியா மற்றும் நோக்கியா பிராண்ட் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம் சார்பில் இருந்து எந்தவித உறுதியான தகவலும் கிடையாது, அதற்காக கிடைக்கப்பெற்ற தகவல்களை வழங்காமல் இருக்க முடியுமா..? இது நோக்கியா சார்ந்த தகவல் ஆகிற்றே.!

 

மிகவும் மலிவு விலையில் நோக்கியா 5

வதந்திகளின்படி பின்னிஷ் தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா அதன் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியிடுமென்று பேச்சு அடிபட்டுள்ளது. ஆனால் இக்கருவியின் வெளியீட்டு தேதி பற்றிய எந்த அறிவிப்பையும் நோக்கியா அல்லது எச்எம்டி உறுதி செய்யவில்லை. வதந்திகள் நம்பகமானதாக இருப்பின் இந்த மாதம் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை விட நோக்கியா 5 கருவி மிகவும் மலிவு விலையில் அறிமுகமாகலாம்.

நோக்கியா “ஹார்ட்”

நோக்கியா 5 கருவியுடன் இணைந்து நோக்கியா ‘ஹார்ட்’ என்றவொரு ஸ்மார்ட்போன் திரைவிலக்கமும் அடுத்த மாதம் நிகழலாம். இக்கருவி பற்றிய தகவல்களை ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் கீக்பென்ஞ்-ல் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வதந்திகள் கூறும் அம்சங்கள் படி, நோக்கியா ஹார்ட் ஒரு 5.2 அங்குல எச்டி காட்சி, 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 2ஜிபி ரேம் சேர்த்து, க்வால்காம் ஸ்னாப் 430 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ஒளியியல் அடிப்படையில், வரவிருக்கும் நோக்கியா ஹார்ட் கருவி ஒரு 13எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கலாம்.

ஆண்ட்ராய் டு 7.0 நௌவ்கட்

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய் டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி பற்றிய விவரங்கள், விலை மற்றும் வடிவமைப்பு பற்றிய தெளிவான தகவல் இல்லை. அதை அறிய எம்டபுள்யூசி 2017 நிகழ்வு வரை நாம் பொறுமையுடன் காத்திருக்க மட்டுமே முடியும்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy