பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை:மன்மோகன் சிங் குற்றச்சாட்டு!!


நாட்டின் பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை என்று, முன்னாள் பிரதமர் மன்மோக‌ன் சிங் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ற புத்தகத்தினை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதனை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இணைந்து வெளியிட்டனர். பின்னர் பேசிய மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை திருப்திகரமாக இல்லை என்று கூறினார். நாட்டில் வேலை வாய்‌ப்புகள், புதிய முதலீடுகள், கடன் வளர்ச்சி ஆகியவை எங்கே என்று கேட்கும் நிலை இருப்பதாக ப.சிதம்பரம் கூறினார்.

Close