ட்ரம்பின் நடவடிக்கைக்கு ஒபாமா கண்டனம்!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின், பயணத் தடை நடவடிக்கைக்கு முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் கெவின் லூயிஸ் தெரிவிக்கையில், மக்களின் மத உணர்வுகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது பாகுபாடு காட்டக்கூடாது என்பதே ஒபாமாவின் கருத்து என கூறியுள்ளார். மேலும், தங்கள் உணர்வுகளை தெரிவிக்கப் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்றும், ஆட்சியாளர்கள் அவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் பதவிக்காலம் முடிந்த பின்னர் ட்ரம்பின் செயல்பாடு குறித்து, ஒபாமா கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

Close