தஞ்சை ரயில்நிலையம் முற்றுகை போராட்டம் – SDPI கட்சியினர் கைது!

மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு கடந்த  இரண்டு வருட ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது.தற்போது  பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் பொது மக்களின் மீது ஒரு பொருளாதார போரை நிகழ்த்தியுள்ளதை கண்டித்தும், அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டில் மக்களிடையே மதவாத வெறுப்பு சிந்தனைகளை புகுத்தி வருகிவதை கண்டித்தும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான போராட்டத்தில் கூட அறவழிப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக வகுப்புவாத சிந்தனைகளை தூண்டியதை கண்டித்தும் தேசம் முழுவதும் SDPI கட்சி ஜனவரி 31-ஐ கருப்பு தினமாக அனுசரித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகிறது. 

அதன் ஒரு பகுதியாக  தஞ்சை ரயில்நிலையம் முற்றுகை போராட்டம் மாவட்ட தலைவர் Z.முகமது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
இதில் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால்  உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.

Close