Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையை சுத்தமாக்க சுற்றுச்சூழல் மன்றம் 90.4 துவக்கம் (படங்கள் இணைப்பு)

அதிரையின் தலையாய பிரச்சனையாக கருதப்படும் சுற்றுச்சூழல் பிரச்சனையை தீர்க்க அதிரையில் இமாம் ஷாபி கல்விக்குழுமம் மற்றும் அதிரை FM 90.4 அதிரை பேரூராட்சியுடன் இணைந்து சுற்றுசூழல் மன்றம் 90.4 என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை தொடங்கியுள்ளனர். முதன் முதலாக இதனை சி.எம்.பி லேன் பகுதியில் தொடங்கியுள்ள இவர்கள் ₹100 க்கு வீடு வீடாக குப்பைகளை சேகரித்து வைக்க வாளி மற்றும் பைகளை வழங்கினர். இதன் தொடக்க விழா நேற்று இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற நிலையில், இன்று அதிரை வண்டிப்பேட்டை அருகே இந்த பணி தொடங்கியது. இதனை இமாம் ஷாபி பள்ளியின் தாளாலர் எம்.எஸ்.தாஜுத்தீன் அவர்கள் குப்பைகளை அள்ளி தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள், காதிர் முஹைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் இணைந்து தெருக்களை சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர். இந்த நிகழ்வில் சுற்றுசூழல் மன்ற தலைவர் விவேகானந்தன், அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர்.அன்பழகன், அதிரை காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் உதுமான் முகைதீன், சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் தலைவர் அஹமது அனஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.