Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை முஸ்லிம் லீக் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.அஹமது மறைவுக்கு இரங்கல்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அகமது,கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்,வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட கேரள மாநில எம்.பி இ.அகமது ,குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது திடீரென நேற்று மயங்கி விழுந்தார்.இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருந்ததால்,நேற்று மதியம் 2.15 மணி அளவில் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.15 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அகமது உயிரிழந்தார்.

இந்த நிலையில் இவருடைய மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, அதிரை முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரை முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்துகொண்டு அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்தனர்.

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy