அதிரை நில உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை பிப். 10-க்குள் அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆணைப்படி தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை பிப். 10-க்குள் நில உரிமையாளர்கள் தாங்களே முன் வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அகற்றத் தவறினால் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் உள்ளாட்சித் துறையால் அகற்றப்பட்டு, அதற்காகச் செலவுத் தொகை தொடர்புடைய நிலத்தின் உரிமையாளரிடமிருந்து 2 மடங்காக வசூலிக்கப்படும்.

Close