+2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் தொடக்கம்…


த​மிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறைத்தேர்வுகள் தொடங்குகின்றன. வரும் மார்ச் மாதம் 2ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (பிப்ரவரி 2) தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மொத்த தேர்வெழுதும் சுமார் 6 லட்சம் மாணவர்களில், 1லட்சத்து 50 ஆயிரம் பேர் செய்முறைத் தேர்வை எழுத இருப்பதாக அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது

Close