அமெரிக்காவின் அராஜக வழியில் குவைத்!

அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய நடவடிக்கையைப் போல, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளிலிருந்து அகதிகளாக வருவோருக்கு விசாவை நிறுத்தி வைத்து குவைத் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வளைகுடா பகுதியில் முக்கியமான நாடுகளில் ஒன்றான குவைத், எண்ணெய் வளம் மிக்கது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசாவை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டிருந்தார்.

தற்போது, அமெரிக்காவின் நடைமுறையை பின்பற்றியுள்ள குவைத் அரசானது, பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் மேற்கண்ட ஐந்து நாட்டவர்களுக்கு குவைத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் குவைத் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 27 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், இதே போல தாக்குதல்கள் நடைபெறலாம் என எச்சரிக்கை நடவடிக்கையாக குவைத் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Close