உயிர் பறிக்கும் லிச்சி பழங்கள்! எச்சரிக்கை!

வட இந்தியாவில் மர்ம நோயால் ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழக்க காரணம் லிச்சி பழத்தில் உள்ள நச்சுத்தன்மையே என்று அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் உள்ள சிறுவர்கள் திடீர் நோயாலும் சுய நினைவு  இழப்பாலும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.  இதில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

புதிய ஆய்வுகளின் படி, உயிரிழந்த சிறுவர்கள் லிச்சி பழத்தின் விஷத்தால் பாதிக்கப்பட்டதாக The Lancet மருத்துவ பத்திரிகை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் லிச்சி பழ மர தோட்டங்கள் நிறைந்த பகுதியில் வசிப்பதாகவும் அவர்கள்  கீழே விழுந்த லிச்சி பழத்தை வெறும் வயிற்றில் உண்டதாலேயே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக The Lancet பத்திரிகை தெரிவித்துள்ளது.

லிச்சி பழம் நச்சு உடையதால் அது நம் உடலில் க்ளுகோஸ் உற்பத்தியை நிறுத்தக்கூடியது. ஏழை சிறுவர்கள் இரவில் உணவு உண்ணாததால், அவர்கள் இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு குறைவாக இருக்கும். இந்நிலையில், அவர்கள் லிச்சி பழத்தை உண்பதால் க்ளுகோஸ் அளவு அபாயகரமான வகையில் மிகவும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அவர்களை மிகவும் பாதித்ததாகவும், இதன் காரணமாக அவர்களில் மூளையில் வீக்கம் ஏற்பட்டதுடன், சுயநினைவும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முசாஃபர்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சிறுவர்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் தீவில் வசித்துவரும் சிறுவர்களும் இதேபோன்றதொரு பிரச்சனையால் தீவிரமாக பாதிப்படைந்ததாக தெரிவிக்கின்றனர்.

அக்கி பழம் அதிகம் சாப்பிடக்கூடிய கரிபியன் சிறுவர்கள், அதிலிருந்த hypoglycin என்னும் நஞ்சால் பாதிக்கப்படைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இதே நஞ்சு லிச்சி பழத்திலும் இருப்பதாகவும், இதனால் சிறுவர்களுக்கு லிச்சி பழத்தை அதிக அளவில் கொடுக்கவேண்டாம் என்று பெற்றோர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சீனாவை பூர்வீகமாக கொண்ட லிச்சிப்பழம், இந்தியாவில் பீகார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விளைவிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Close