Dr.Pirai-ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள்!

உடலுக்குத்தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச்செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத்தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும்.

ஆரஞ்சுப்பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக்கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும், சக்தியும் கிடைத்து விடுகிறது. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப்பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மி.லி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச்சத்து போல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

ஆரஞ்சு பழத்தை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதி களால் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம். மேலும் உடல் சூடு, கண் பார்வைக் கோளாறு, சளித்தொல்லை இவை அனைத்தும் சேர்ந்த வியாதி உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத் திற்கு ஏற்ற ஒரே பழம் ஆரஞ்சுப்பழம்.

குடல்புண் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் அற்புத உணவு, செரிக்கும் சக்தியையும், பசியையும் அதிகப்படுத்துவதுடன் நொந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களை புதுப்பிக்கிறது.

இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது. பல் வலி, பயரியா போன்ற கோளாறுகளைத் தீர்க்கும்.

உடல் சூடு, வெட்டைச்சூடு, மூலவியாதி போன்றவற்றிற்கும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் பலன் கிட்டும். உடம்பில் மிகுந்துள்ள விஷத்தன்மையை முறித்து காய்ச்சலிலிருந்து உடனே நிவாரணம் தருகிறது.

உடல் எடை, மூட்டுவலி, உடம்பில் அதிக உப்புச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சஞ்சீவி கனியாக செய்ல் படுகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் இப்படிச்சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள்.

வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது. குழந்தைகளின் பிரைமரி காம்ளக்ஸ் சரியாகும்.

Close