ரேஷன் கார்டில் இன்னும் நீங்கள் ஆதார் விபரத்தை பதியவில்லையா ? உங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு…

தமிழகத்தில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொன்டுள்ளது.

இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டு அவை ரேஷன் கடைகளில் உள்ள டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, ‘மொபைல் ஆப்’பில், பதிவு செய்யப்பட்ட வருகிறது.

கடந்த சில மாதங்களாக தமிழக அரசு இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பலமுறை ஈது குறித்து பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டும் .இதுவரை, நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரது, ஆதார் விபரங்களை கூட பதியவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேல் அவகாசம் தரப்பட்டும் 4 லட்சம் பேர் விபரம் தராமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது, ஒரு குடும்பத்தில், ஒருவரின் ஆதார் கார்டு கூட பதியாதவர்களின், ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

அவர்கள், ரேஷன் கடைக்கும், உணவு வழங்கல் அலுவலகத்துக்கும், அலைவதை தடுக்கும் வகையிலும் கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்க உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி பொது மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களுடன், ரேஷன் கடை எண், மொபைல் எண்ணை ஒரு தாளில் எழுதி, உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலக ஊழியர்களே பதிவு செய்து, அந்த விபரத்தை தெரிவிப்பர். இந்த வாய்ப்பை விட்டுவிட்டால், ‘ஸ்மார்ட்’ கார்டு கிடைப்பது மிகவும் கடினம் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. எனவே ரேஷன் கார்டில் இன்னும் நீங்கள் ஆதார் விபரத்தை பதியவில்லையா ? உங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு…

Close