ஜமாலும் கமாலும்

ஜமால்: வாங்க கமாலு, ரெண்டு நாளா ஆளையே காணோம் …
கமால்: அது ஒன்னும் இல்ல, என் ராத்தா மொவன் +2 முடிச்சுட்டான், அதான் அவன காலேஜுல அட்மிஷன் போட போனேன்
ஜமால்: அப்புடியா, உன் மருமோவன் என்ன மார்க்கு எடுத்தான்?
கமால்: கம்மீதான் ஜமாலு, 816 மார்க்கு தான்
ஜமால்: இதுவே கம்மி மார்க்குன்னு சொல்றியே அப்போ என் மச்சான் 610 மார்க்தான் வாங்குனான், உன் மருமொவன என்ன படிக்க வைக்கபோறீங்க
கமால்: எஞ்சினியரிங் படிக்க சொல்லி ராத்தா சொன்னாங்க, ஆனா 816 மார்க்குக்கு சென்னைல  உள்ள ஒரு காலேஜுல இரண்டரை லட்சம் டொனேசன் கேட்குறாங்க அதான் போயிட்டு காலேஜுல சேக்காம வந்துட்டேன்.
ஜமால்: அப்புடியா இப்பதான் எஞ்சினியரிங் தான் வேல்யூ இல்லாம போச்சே, அப்புறம் என்ன இதுக்கு இவ்வளவு காசு கேட்குறாங்க.
கமால்: ஆமாம், வீட்டுலயும் சொல்லிட்டாங்க, இவ்வளவு செலவழிச்சு எஞ்சினியரிங் வேணாம்னு, என் மருமகனும் இன்ட்ரெஸ்ட் இல்லாமதான் இருக்கான்.
ஜமால்: அதுவும் நல்லதுதான், நீ அவன நாம் ஊர் காலேஜுல சேர்த்து விட்டுட்டு, அப்புடியே நல்ல மதரஸா வுல ஹிப்லு பாடத்துல சேர்த்து விடு, இம்மை ம்றுமை இரண்டுலையும் பயன் கிடைக்கும்.
கமால்: அதுவும் நல்ல ஐடியா தான் இப்பவே போய் ராத்தா ட சொல்றேன், சரியா 
ஜமால்: நல்லது, சரி தேர்தல் முடிவுலாம் பாத்தியா,
கமால்: ம்ம்ம், பாத்தேன் தலை சுத்திருச்சு, தேர்தல் ரிசல்ட பார்த்தா நம்பவே முடியல 
ஜமால்: எனக்கும் அப்புடி தான் இருந்துச்சு, எது எப்புடியோ அரசியல் வாதிங்க கேட்டத மக்கள் கொடுத்துட்டாங்க, மக்கள் கேட்டத அரசியல் வாதிங்க கொடுப்பாங்க்களான்னு பாப்போம்……

Close