பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடமாடும் பெண் திருடர்கள்! உஷார் ரிப்போர்ட்!

திருத்துறைப்பூண்டியில் – முத்துப்பேட்டை சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராதா(வயது66). இவர் சம்பவத்தன்று பட்டுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் திருத்துறைப்பூண்டிக்கு வர பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் பஸ் ஏற சென்றார். அப்போது அங்கு நின்ற திருத்துறைப்பூண்டி பஸ்சில் ஏறியபோது, சில பெண்கள் ராதாவுக்கு உதவுவது போல் நடித்து ராதாவிடம் இருந்த பைகளை வாங்கி பஸ் இருக்கையில் வைத்தனர்.
இதன்பின் திருத்துறைப்பூண்டிக்கு வந்த ராதா பஸ் நிலையத்தில் தான் வைத்திருந்த பொருட்கள் சரியாக உள்ளதா? என்று பார்த்தார். அப்போது 9 பவுன் நகைகள் வைத்திருந்த பையை காணவில்லை. பஸ்சில் ஏறியபோது உதவுவதுபோல் நடித்து பைகளை வாங்கிய பெண்கள், நகை வைத்திருந்த பையை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ராதா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் பயணிக்கு உதவி செய்வது போல் நடித்து நகைகளை திருடிச் சென்ற பெண்களை தேடி வருகிறார்கள். திருட்டுபோன நகையின் மதிப்பு ரூ. 2 லட்சம் என கூறப்படுகிறது.
தகவல்: muthupettaibbc
Close