அதிரையில் போலி நாட்டுக்கோழி முட்டைகள்! மக்களே உஷார்!

நாட்டுக்கோழி முட்டைகள் என்ற பெயரில் திரி ராஜா கோழி பண்ணை முட்டைகள் அதிரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஈரோட்டில் பண்ணை மூலம் வளர்க்கப்படும் இக் கோழிகளின் முட்டைகள் நாட்டு முட்டைகள் எனக்கூறப்பட்டு நமது ஊரில் அதிகளவில் விற்கப்படுகிறது. இந்த கோழிகள் சேவல் துணையின்றி ஊசியின் மூலமே முட்டையிடுகின்றன. இந்த முட்டைகளை சிலர் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு கொடுக்கின்றனர். இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது, எனெனில் உயிரணு இல்லாத இந்த முட்டைகள் பெண்களின் கருவை பாதிகக்கூடும் என கூறப்படுகிறது. எனவே, நாட்டுக்கோழி முட்டைகள் வேண்டுமெனில் வீடுகளில் வளர்க்கப்பட்டதா என்று பார்த்து வாங்குவது நல்லது.

தகவல்: வஹா சலீம்

Close