பொதுத் தேர்தலில் அடைந்த வரலாறு காணாத தோல்வி

பொதுத் தேர்தலில் அடைந்த வரலாறு காணாத தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் வழக்கம்போல் ராஜினாமா நாடகம் ஒன்று அரங்கேறியுள்ளது.முதலில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்திருக்கின்றார் என்ற செய்தி வெளியாகியது.ஆனால், ஸ்டாலின் ராஜினாமா முடிவை ஏற்க திமுக தலைவர் கருணாநிதி மறுத்தார் என்றும் இதனையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதவி விலகும் முடிவை திரும்பப் பெற்றார் என்றும் அடுத்தடுத்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.ராஜினாமாவை வற்புறுத்தப் போவதில்லை என ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.ஸ்டாலின் சேவை, திமுக-வுக்கு தேவை என கருணாநிதி கூறியதாகவும் மனம் தளராமல் கட்சிக்கு பணியாற்றுமாறு தொண்டர்களை கருணாநிதி வலியுறுத்தியுள்ளார் என்றும் ராஜினாமா என்றால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று உண்மையிலேயே ராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டும்.மகன் தந்தையிடம் ராஜினாமா கடிதம் தருவதும் – தந்தை அதை ஏற்காததும் இந்த நவீனயுக வாக்காளர்களை எந்தவிதத்திலும் ஈர்க்கப் போவதில்லை.நாளை காங்கிரஸ் கட்சியிலும் அம்மா – மகன் இருவருக்கும் இடையிலும் இதே நாடகம்தான் அரங்கேறப் போகின்றது.துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

Close