Adirai pirai
posts

இந்திய அளவில் 3 வது பெரிய கட்சியானது அ.தி.மு.க

இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளிகளும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. இதன்  மூலம்
 பாஜக கட்சி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பாண்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதனை அடுத்து முன்னால் ஆளும் கட்சியான காங்கிரஸ் 43 இடங்களை மட்டுமே பெற்று எதிர்கட்சியாகவுள்ளது. இதனை அடுத்து தமிழக கட்சியான அ.தி.மு.க 37 தொகுதிகளில் வெற்றிபெற்று தேசிய அளவில் 3வது தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. இந்த கட்சியை அடுத்து 4வது பெரிய கட்சியாக திரிணமுல் காங்கிரஸ் அணி இடம் பெற்றுள்ளது.
 
இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இடது சாரிகள் 9 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பெறும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழத்தின் முக்கிய கட்சிகளான  தி.மு.க, தே.மு.தி.க, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், ம.ம.க, முஸ்லிம் லீக், SDPI ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.