18-வது முறையாக இரத்ததானம் செய்த அதிரை இளைஞர் இப்ராஹிம் அலி!

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் அலி. சமூக ஆர்வலரான இவர் இரத்ததான சேவைகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் இரத்ததான சேவையில் சிறந்து விளங்கும் கிரெசண்ட் பிளட் டோனார்ஸ் அமைப்பினுடைய அதிரை நகர தலைவராகவும் இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண்ணுக்கு அவசரமாக A1POSITIVE இரத்தம் ஒரு யூனிட் தேவைப்பட்டது . இதையடுத்து இப்ராஹிம் அலி தான் முன்வந்து இரத்த தானம் செய்தார். இது இப்ராஹின் அலியின் 18-வது இரத்ததானம் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்காக்கும் உன்னத சேவையான இரத்ததான சேவையை தொடர்ந்து செய்து வரும் கிரெசண்ட் பிளட் டோனார்ஸ் அமைப்புக்கும், அதன் நகர தலைவர் இப்ராஹிம் அலிக்கும் அதிரை பிறையின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Close