பெற்றோர்களே எச்சரிக்கை!

வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை ரூபெல்லா தடுப்பூசி முகாம் அமைத்து மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட 7-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா (வயது 12) அடுத்த சில விநாடிகளில் மயங்கி விழுந்தார். இவர், சத்துவாச்சாரி அரசு பள்ளி பின்புறம் வசிக்கும் முருகானந்தம் என்பவரின் மகள்.

இதேபோல் 9-ம் வகுப்பு மாணவர்கள் வள்ளலார் பேஸ்-1 பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் கவுதம் (14), ரங்காபுரம் பாலாஜி மகன் வைத்தீஸ்வரன் (14) ஆகிய 2 பேரும் தடுப்பூசி போட்ட அடுத்த சில நொடிகளில் மயங்கி விழுந்தனர்.

Close