இரவோடு இரவாக பல குழப்பங்கள் தடந்தேரியது: ADMK 

மக்கள் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த முடிவை வாபஸ் பெற தயார் என்று காபந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதால் அதிமுக பொதுச்செயலர் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


கட்டாயப்படுத்திதான் தன்னை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சசிகலா மற்றும் அவரை சார்ந்தோர் நிர்பந்தம் செய்துவிட்டனர் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், தனி நபராக எதிர்த்து போராட தயார் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெற தயார் என கூறியுள்ளார். எனவே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஒருவரே பகிரங்கமாக இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அல்லது ஆட்சியையும் கலைக்க வாய்ப்புள்ளது.
இந்த களேபரங்கள் காரணமாக சசிகலாவுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைக்க ஆளுநர் விரும்ப மாட்டார் என்று தெரிகிறது. அடுத்தவாரம் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக உள்ளதால் இதையெல்லாம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கருத்தில் கொள்வார் என தெரிகிறது.

Close