தம்பிக்கோட்டை பாமினி ஆற்று பாலத்தில் கார் மோதி விபத்து

முத்துப்பேட்டை அருகே நேற்று அதிகாலை வேளாங்கன்னியிலிருந்து தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் சென்ற கார் பாலத்தில் மோதி 12 பேர் படுகாயம்.

தூத்துக்குடி மாவட்டம், தர்விலிகம் பகுதியைச் சேர்ந்தவர் தாவூதி ராஜா(26). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வேளாங்கன்னி மாதா கோவில் பிரார்த்தனை செய்ய கடந்த 7-ம் தேதி வியாழக்கிழமை ஊரிலிருந்து புறப்பட்டு 8-ம் தேதி வேளாங்கன்னி சென்றடைந்தனர். 
அங்கே குடும்பத்துடன் 2 நாள் தங்கி விட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி செல்ல வேளாங்கன்னியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புறப்பட்டு சென்றனர். அதிகாலை 4 மணிக்கு முத்துப்பேட்டை கடந்து தம்பிக்கோட்டை பாமினி ஆறு பாலம் சென்று கொண்டிருந்த போது கார் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்து அந்தரத்தில் நின்றது.

இதில் காரில் பயணம் செய்த தாவூதி ராஜா(26), ஹரிதாஸ்(25), மெர்ஸி(48), ஸ்டிப்பிக்(23), அன்பரசி(30), சோபி(22), எடிசன்(25), குழந்தைகள் பியூனா(1), இன்வென்டா(1) மேலும் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Close