இனி வங்கிகளில் வாரம் ₹50,000 வரை எடுக்கலாம் : RBI

பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளிலிருந்து வாடிக்கையாளர்கள் வாரம் ரூ.50,000 வரை எடுக்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதே போல் மார்ச் 13,2017-க்குப் பிறகு பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு முற்றிலும் அகற்றப்படும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற நிதிக்கொள்கை கூட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்களில் சில:

* ரிபோ ரேட் 6.25% என்பதில் மாற்றமில்லை.

* நிதியாண்டு 2017 பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9% ஆக குறைந்துள்ளது, 2017-18-ல் இது 7.4% ஆக வளர்ச்சியடையும்.

* 2017—18-ல் வளர்ச்சி விகிதம் மேலும் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Close