ஆளுநர் சென்னை வருகை!

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பகல் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழல் முடிவிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 5ம் தேதி சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 5ம் தேதி கோவையில் இருந்து டெல்லி சென்ற ஆளுநர், அங்கிருந்து மும்பை சென்றார். அதைத் தொடர்ந்து அவர் எப்போது தமிழகம் வருவார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது.

Close