அதிரை கடற்கரைத் தெருவில் குடிநீரில் கழிவு நீர்! பேரூராட்சியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் புகார்!

அதிரை பேரூரட்சி அலுவலகத்துக்கு நேற்று பேரூராட்சி நிர்வாக இயக்குனர் ரவிதாஸ் வருகை தந்தார். அவர்களை சந்தித்த அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர், கோரிக்கை மனுவை வழங்கினர். அதில், தங்கள் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால், ஏராளமான குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதாகவும், சீமை கருவேலமரங்கள் அகற்றப்படாமல் உள்ளதாகவும், வடிகால் வாய்காலில் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் தங்கள் பகுதியில் சுகாதாரம் சீர்கெட்டு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனை சரிசெய்து நடவடிக்கை எடுக்க கோரியும் கேட்டுகொண்டனர்.

 

Close