அதிரையில் சி.எம்.பி வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்..! (படங்கள் இணைப்பு)

அதிரையின் தலையாய பிரச்சனையாக கருதப்படும் சுற்றுச்சூழல் பிரச்சனையை தீர்க்க அதிரையில் இமாம் ஷாபி கல்விக்குழுமம் மற்றும் அதிரை FM 90.4 அதிரை பேரூராட்சியுடன் இணைந்து சுற்றுசூழல் மன்றம் 90.4 என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை தொடங்கியுள்ளனர். முதன் முதலாக இதனை சி.எம்.பி லேன் பகுதியில் தொடங்கியுள்ள இவர்கள் ₹100 க்கு வீடு வீடாக குப்பைகளை சேகரித்து வைக்க வாளி மற்றும் பைகளை வழங்கினர்.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக அதிரை மற்றும் பிற ஊர்களை சேர்ந்த அரசு துப்புரவு பணியாளர்கள் முதல் கட்டமாக அதிரை சி.எம்.பி லேன் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சி.எம்.பி. வாய்க்காலில் உள்ள புதர்களை ஜே.சி.பி மூலம் நீக்கி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Close