குவைத்தில் மரணமடைந்த வெளிநாட்டவரை அடக்கம் செய்வதற்கு புதிய சட்டம்!

குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினர் மரணிக்க நேரிட்டால் அவர்களின் உடல்களை குவைத்திலுள்ள கபரஸ்தான்களில் அடக்க வேண்டுமாயின் இறந்தவருக்கு கட்டாயம் செல்லுபடியாகக்கூடிய ‘இகாமா’ எனும் அடையாள அனுமதி அட்டை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டுவோர், குழிகளை தோண்டுவோர் போன்ற இதர வகை ஜனாஸா சேவைகளில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கொடுப்பதற்காக சிறிய தொகை ஒன்றை சேவைக்கட்டணமாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகம் மூலம் பெறுவதற்கும் உத்தேச திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Source: Arab Times

Close