தமிழக அரசியல் குழப்பம்! குடியரசு தலைவர் தேர்தலுக்காக காய் நகர்த்துகிறதா மத்திய அரசு?

இன்னும் சில மாதங்களில் குடியரசு தலைவர் தேர்தல் வர இருக்கிறது. இதில் இந்தியாவெங்கும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு முக்கியப் பங்கு வகிக்கும்.

பெரிய மாநிலங்களான பீகார்,மேற்குவங்காளம்,மகாராஷ்டிராவில் (சிவசேனாவுடன் பிரிவு. சரிபாதி உறுப்பினர்கள் காங்கிரஸ், என் சி பி வசம்) பிஜேபிக்கு சொற்ப உறுப்பினர்கள்.

அடுத்து மிகப்பெரிய மாநிலமான உபியின் தேர்தல் முடிவு பிஜேபிக்கு அதிர்ச்சியளிக்கும். பஞ்சாப் கைவிட்டுப் போய்விட்டது.

பிஜேபி ஆளும் குஜராத்,சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான்,காஸ்மீர்,அஸ்ஸாம்,ஹரியான மாநிலங்களில் கூட மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் காங்கிரஸ் வசம்.

கர்நாடகா,கேரளா, டெல்லி, ஒடிசா, திரிபுரா,மேகாலயா, இமாச்சல் பிரதேசம் பற்றி சொல்லவே தேவையில்லை.

இந்தச் சூழலில் ஆந்திராவும்,தமிழகமுமே கைகொடுக்க வேண்டும்.

தமிழகம் குறிப்பாக அதிமுக (37+14 எம்பிகள்,134 சட்டமன்ற உறுப்பினர்கள்) எதிர்த்து வாக்களித்தால் பிஜேபி வேட்பாளரின் தோல்வி உறுதியாகிவிடும்.

இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை.
ஆகவே எண்ணிக்கையை ஒட்டியே பிஜேபி காய் நகர்த்தும்.

பிஜேபியின் முக்கியத் தலைவரான சுப்ரமணியம் சுவாமியின் சசிகலா ஆதரவு நிலைப்பாடும், குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி காய்களை நகர்த்துவதுபோல் தோன்றும் கவர்னரின் செயல்பாடும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

Close