எப்புடி இருந்த நம்ம ஊரு…. இப்புடி சுத்தமா ஆயிடுச்சு…! (EXCLUSIVE புகைப்பட தொகுப்பு)

கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஆலோசனை செய்து கடந்த பிப்ரவரி 1 ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல்மன்றம் 90.4 அதிராம்பட்டினத்திலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் உள்ள தன்னார்வலர்கள், சமூக அமைப்புகளை உள்ளடக்கி துவங்கப்பட்டது. சுத்தமான அதிரையை உருவாக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதில் அதிரை சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர், அரிமா,ரோட்டரி, கிரெசண்ட் பிளட் டோனார்ஸ், NSS, YRC, போன்றவற்றோடு சமூக சங்கங்களும் களப்பணியில் இறங்கி தூய்மைப்பணியை பிப்ரவரி 1 ம் தேதி துவக்கப்பட்ட இதில். கௌரவத்தலைவர் ஹாஜி MS.தாஜுத்தீன் அவர்களும், தலைவர் விவேகானந்தன் அவர்களும் சுறுசுறுப்பாக இயங்க வைத்தனர். ஆனால் பேரூராட்சின் அலட்சியம், ஊழியர்களின் ஒத்திழையானை ஆகியவற்றால் இத்திட்டதை செயல் படுத்தமுடியாமல் திணறியபோது இது சம்மந்தமாக அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பேரூராட்சியின் அலட்சியப்போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம் நடத்த ஆலோசித்தனர்.

இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோருக்கு இது சம்மந்தமாக முறையான மனு அனுப்பப்பட்டு அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலால் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அய்யா இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் வல்லம் பேராவூரணி திருவையாறு, அய்யம்பேட்டை, அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, பெருமகளூர், ஆடுதுறை ஆகிய ஊர்களைச் சார்ந்த 40 துப்புரவுத்தொழிளாலர்கள் வரவழைக்கப்பட்டு தூய்மைப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சிறப்பாக நடைபெற்று வரும் தூய்மைப்பணியால் ஒருவாரத்தில் அதிரை பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது என்பதை கீழ்காணும் படங்கள் தங்களுக்கு புரிய வைக்கும்.

தூய்மை பணிக்கு முன்னர்

தூய்மை பணிக்கு பின்னர்

தூய்மை பணிகளின் போது

அதிரையர்களின் பல நாள் கோரிக்கையான திடக்கழிவு மேலாண்மையை முன்னிறுத்தி சிறப்பாக சேவையாற்றி வரும் இந்த குழுவினருக்கு அதிரை பிறையின் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகிறோம்.

Close