தீவிரவாதிகள் என கைதான இஸ்லாமியர்கள் 14 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாவிகள் என விடுதலை!

2002ல் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பில் கைதான நான்கு இஸ்லாமிய இளைஞர்களும் நிரபராதிகள்…

14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்த அஹமதாபாத் நீதிமன்றம்…!

கடந்த 2002ம் ஆண்டு டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு சில பாசிச தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. ஆனால் வழக்கம் போல காவல்துறையோ முஸ்லிம்கள் நான்கு பேரை கைது செய்து தனது கடமையை தவறாமல் செய்து முடித்தது.

2002ம் ஆண்டு கைதான ஹபீப் ஹவா, ஹனிப் பஹ்டிவாலா, காலிம் அஹம்மது, அனஸ் மஸிஸ்வாலா ஆகிய நான்கு அப்பாவி முஸ்லிம்களும் 14 வருடங்களாக சிறைகைதிகளாக வைத்து சித்தரவதை செய்தது காவல்துறை.

இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வியாழன் அன்று அஹமதாபாத் நீதிமன்றம் வழங்கியது. அதில் இதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு இளைஞர்களுக்கும் இந்த வெடிகுண்டு நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் நால்வரையும் விடுதலை செய்வதாகவும் அறிவித்துள்ளது.

எந்த குற்றமும் செய்யாதவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைவாசம். இதுதான் இந்திய சட்டம்…

எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனே நான்கு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சிறைக்கு அனுப்பிவிட்டு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கின்றன பாசிச வெறிகொண்ட காவல்துறை.

இளமை வாழ்வை சிறையிலேயே கழித்த இவர்களுக்கு இந்திய சட்டம் என்ன சொல்லப்போகிறது???

வழக்கம் போல குண்டுவெடிப்பு நிகழ்ந்து கைது செய்தபோது Breaking News வெளியிட்ட காட்சி ஊடகங்கள் நிரபராதி என விடுதலை செய்த செய்தியை வெளியிடாமல் தாங்கள் பாசிச கைகூலிகளே என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளன…

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தையல் மிஷினும், உதவித்தொகையும் வழங்க ஆணையிட்ட நீதிமன்றமே…

எந்த தவறும் செய்யாமல் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவத்த இந்த நால்வருக்கும் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடு…

இந்திய அரசே… இழப்பீடு வழங்குவதோடு வாழ்வை தொலைத்த இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்கிடு…

காக்கி ஆடையில் சுற்றி திரியும் காவித்துறையே இனியும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்காதே…

செய்தி தகவல்: நன்றி Times Of India

Close