அதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம் (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரையில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மர்ம காய்ச்சல் காரணமாக அதிரையில் பலர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கள் உடம்பை தாக்காத வகையில் நிலவேம்பு மூலிகை கசாயம் அதிரையில் விநியோகம் செய்யப்பட்டது. அதிரை பேருந்து நிலையம் அருகே இன்றுடன் 3 வது நாளாக சமூக ஆர்வலர்கள் சிலரால் விநியோகிக்கப்பட்டு வரும் இந்த கசாயத்தை ஏராளமானோர் வாங்கி அருந்தினர்.

Close