குவைத்தில் கோலாகளமாக கொண்டாடப்பட்ட ஹாலா பிப்ரவரி தினம்..! (படங்கள் இணைப்பு)

குவைத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் Hala February என்ற நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று 10/02/2017 வெள்ளிக்கிழமை குவைத்தின் Salem Al-Mubarak St. In Salmiya பகுதியில் வைத்து காலை முதல் மாலையில் சூரியன் மறையும் வரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
இதில் குவைத்தின் பாரம்பரிய குறிக்கும் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் குவைத் அரசு படையின் பல்வேறு பிரவுகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் பங்களிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மற்றும் குவைத்தின் வரலாற்றினை விவரிக்கும் பல Stall-கள் அமைக்கப்பட்டு இருந்தது.இதில் இந்திய சார்பிலும் Stall-கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் குவைத் இந்திய இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அலைக் கடலாக கலந்து கொண்டனர்.
வரும் பிப்ரவரி 25 26 குவைத்தின் 56-வது National Day மற்றும் 26-வது Liberation day நினைவுபடுத்தம் விதத்தில் இந்த நிகழ்வு வருடம் வருடம் நடைபெறும். இந்த ஒரு மாதகாலம் குவைத் திருவிழா கோலமாக காட்சி அளிக்கும்.

Close