ம.ஜ.க பொதுசெயலாளர் தமீம் அன்சாரியுடன் அதிமுக புதிய அவைத்தலைவர் செங்கோட்டையன் சந்திப்பு!

,மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நேற்று இரவு 9 மணி வரை தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து அதிமுகவின் புதிய அவைத்தலைவர் செங்கோட்டையன் அவர்கள் மஜக தலைமையகத்திற்கு இரவு 10 மணியளவில் வருகை தந்து, தங்களது அரசியல் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். மனிதநேய ஜனநாய கட்சியின் ஆதரவு தங்களுக்கு தேவை என்றும் கோரினார்.

தற்போதைய மஜகவின் நிலைப்பாடு குறித்து அறிக்கை நகல் அவருக்கு வழங்கப்பட்டது. அவரது வேண்டுகோள் குறித்து தலைமை நிர்வாகம் கவனத்தில் கொள்ளும் என்றும் கூறப்பட்டது. 

தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
தலைமையகம்,சென்னை

Close