FLASH NEWS: அதிரை ECR சாலையில் கார் வாய்காலுக்குள் விழுந்து விபத்து – UPDATED (படங்கள் இணைப்பு)

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அமீன். இவர் குடும்பத்தினருடன் நாகூர் தர்காவுக்கு காரில் வந்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், அதிரை ஈசிஆர் சாலையில் பிலால் நகர் அருகே இந்த கார் சென்று கொண்டிருந்த போது காரின் முன் பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பிலால் நகர் பாலம் அருகே உள்ள வாய்க்காலுக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. காரில் பயனித்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக பிலால் நகர் ஈசிஆர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

படங்கள்: சாலிஹ்(அதிரை பிறை)

Close