Adiraipirai.in
posts

ஊரெல்லாம் தேர்தல் பேச்சு! நாளை விடிஞ்சா போச்சு!

இந்திய தேச மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. வேட்பாளர்கள் முதல் வாக்காளர்கள் வரை அனைவரும் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று தீர்மாணிக்கும் இந்த நாளுக்காக காத்துள்ளனர். 10 ஆண்டுகாலமாக ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க கட்சிக்கும் இத்தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மோடி அலையை நம்பி நம்பிக்கையுடன் களம் இரங்கி இருக்கும் பா.ஜ.க ஒரு பக்கம், ராகுல் காந்தியின் இளம் புரட்சியான அரசியல் வியூகத்துடனும் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தைரியத்துடன் களம் இரங்கியுள்ள காங்கிரஸ் மறுபக்கம், இருப்பினும் புதிய முயற்ச்சியுடனும் மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் ஆதரவுடன் தனியாக களம் இரங்கியுள்ள ஆம் ஆத்மி இன்னொறு பக்கம்.

இப்படி பல முனை போட்டியாக உள்ள நம் தேசத்தில் தேர்தல் கனிப்புகளுக்கு பஞ்சம் இல்லை. வந்த கணிப்புகள் யாவும் நம்ப முடியாத அளவிற்க்கு உள்ளன. சென்ற பாராளுமன்ற தேர்தலில் இது போன்று வெளியான கணிப்புகள் பொய்யாய் போயின. எனவே ஊடங்களின் கருத்து கணிப்புகள் மக்கள் மத்தியில் கருத்து திணிப்புகளாகவே கருதப்படுகின்றன‌.

அதுபோல் நம் தொகுதியான தஞ்சை தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட‌ கு.பரசுராமன் அவர்களுக்கும் மத்தியில் கருத்துகனிப்புகளை சேகரிக்கும் போது கடும் போட்டி நிலவியதாக கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற பல தரப்பட்ட அரசியல் சூழல்களில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. தஞ்சையில் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தேர்தல் முடிவுகள் எண்ணப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக ஊர் முழுவதும் பல முக்கங்களில், நண்பர்கள் சந்திப்பில், திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த அரசியல் பேச்சுக்கள் நாளையுடன் முட்டுக்கட்டை போட்டாற் போல் நின்று விடும்…….

                                                                                                ஆக்கம்: ஜஹ‌பர் அலியின் மகன் நூருல் (அதிரை பிறை)