மாநில அளவில் தடம் பதித்தது அதிரை AFCC

அதிரை AFCC அணி மாவட்ட அளவையும் தாண்டி
தனது திறமையை மாநில அளவில் நிருபித்து இருக்கிறது. கும்பகோணத்தில்
நடைபெற்றுகொண்டிருக்கும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில்  அதிரை
AFCC
அணி 14/05/14 அன்று முதல் நடைப்பெற்ற
லீக் சுற்றில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது . 2 லீக் சுற்றிலும் அதிரை AFCC அணியினர் சிறப்பாக
செயல்பட்டு நமதூர்க்கு பெருமையும் புகழையும் தேடித்தந்துள்ளனர். 
தமிழகத்தில் தலை சிறந்த
அணிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டு இப்போட்டியில் அதிரை AFCC அணியும் இதில் அடங்குவது
சிறப்பம்சம் ஆகும்.தகுதி சுற்றுக்கு பிறகு அதிரை AFCC அணியினர் சென்னை, திருவல்லூர், தஞ்சை, திருச்சி போன்ற
மாவட்டங்களின் தலைசிறந்த அணிகளுடன் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றனர்.   

இப்போட்டியில் அதிரை AFCC அணியில் விளையாடும் வீரர்கள்:
 • ABDUL GAFOOR
 • MOHAMED ISMAIL
 • IMRAN
 • NIJAS
 • NOORUL HAQ
 • DEENUL HAQ
 • SALEEM
 • FAYAS
 • JIFRY
 • RILWAN
 • MUSTHAFA
Arun Nets CC Score Coard

தி  இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி 

வெற்றிப்பயணம் தொடர அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கள்>

செய்தி தொகுப்பு : சலீம், சாலிஹ் 
Close