அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 43வது மாதாந்திர கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 43 வது மாதாந்திர கூட்டம் கடந்த 10/02/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. நிஜாமுதீன் ( உறுப்பினர் )

முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை​​ : சகோ. M. அப்துல் மாலிக் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் தலைமையகத்தின் மாத அறிக்கை வாசிக்கப்பட்டு சேவைகள் குறித்து அதிரை ரியாத் வாழ் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

2) ரிகவரி டெபாசிட் விஷயமாக மீண்டும் ஆர்வமூட்டப்பட்டது.
3) குவைத் பைத்துல்மால் கிளையின் செயல்பாடுகள் அதிரை பைத்துல்மால் தலைமையகத்திற்கு அனுப்பி அதன் மூலம் வட்டியில்லா நகை கடன் அதிகப்படுத்தியதற்கும் ரியாத் கிளை சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்ளப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் MARCH 2017 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

​​​… ஜஸாகல்லாஹ் ஹைர்…

Close